1½ வயது குழந்தையை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தையை தவிக்க விட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் அங்காளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவருக்கு திருமணமாகி கணவரும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் செல்போன் மூலம் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனால் இளம்பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வாலிபருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இளம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் கணவர் இளம்பெண்ணை கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் குழந்தையை தூங்க வைத்து விட்டு இளம் பெண் கள்ளக்காதலுடன் மாயமானார்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இளம்பெண் கணவர் ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young woman ran away with illegal boyfriend in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->