கரூரில் சோகம் - காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை - காரணம் என்ன?
young woman sucide attempt in karoor
கரூரில் சோகம் - காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை - காரணம் என்ன?
கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காடுதுறை பகுதியை சேர்ந்தவர்கள் பூபேஸ்- காயத்ரி தம்பதியினர். இவர்களுக்கு மிதுன் என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் பூபேஸ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி காயத்ரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்..
மேலும் தனது மனைவியின் பெற்றோர்களிடம் தங்க நகை வாங்கி வருமாறும் அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். கணவரின் தொந்தரவு தங்க முடியாமல், காயத்ரி தனது பெற்றோர்களிடம் இருந்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு 4½ பவுன் தங்கசங்கிலி வாங்கி வந்து கொடுத்துள்ளார்.
இதையடுத்து நேற்று காலையும் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த காயத்ரி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த பூபேஸ் மனைவி காயத்ரியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காயத்ரியின் உறவினர் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
young woman sucide attempt in karoor