திருவள்ளூர் அருகே இளம்பெண் தற்கொலை.! குழந்தை இல்லாதது தான் காரணமா? - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் அருகே இளம்பெண் தற்கொலை.! குழந்தை இல்லாதது தான் காரணமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழுவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மதன் - நாகராணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. 

இந்த நிலையில், நாகராணி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக நாகராணியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young woman sucide in tiruvallur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->