பானி பூரியால் பறிபோன இளம்பெண் உயிர்? வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பானி பூரி சாப்பிட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் உணவு பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக ஆரோக்கியமான உணவு வகைகளை தவிர்த்து விட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நொறுக்கு தீனி போன்ற உணவுகளை அதிகம் மக்கள் விரும்புகின்றனர்.

அதன் காரணமாக சில உணவுகளை சாப்பிட்டு விட்டு சில குளிர்பானங்கள் மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் மோனிஷா (24 வயது) என்ற இளம் பெண் பாணி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலை பிடிக்க படிக்கட்டுகளில் வேகமாக ஏறிச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.

 இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ்சார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young women death after ate Pani Puri in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->