போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த வாலிபர் கைது.!
Youngman arrested for fraud by pawning fake jewelry in chennai
சென்னையில் போலி நகைகளை அடகு வைத்து ரூபாய் மூன்று லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (34). இவர் கடந்த 14ஆம் தேதி ஆவடியை அடுத்த கோவில் பதாகை மெயின் ரோட்டில் உள்ள புகாராஜ் என்பவரது அடகு கடையில் 3 பவுன் நகை அடமானம் வைத்து 75 ஆயிரம் ரூபாய் வாங்கிச் சென்றுள்ளார்.
இதையடுத்து புகாராஜ் நகையை பரிசோதனை செய்ததில் அது போலி நகை என்று தெரியவந்தது. ஆனால் அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்பதால், மீண்டும் நேற்று முன்தினம் புகாராஜ் கடைக்கு வெங்கடேசன் நகை அடகு வைக்க வந்துள்ளார்.
ஆனால் உஷாரான புகாராஜ், வெங்கடேசனை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வெங்கடேசனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் மேலும் மூன்று கடைகளில் போலி நகைகளை அடகு வைத்தது தெரியவந்தது.
இந்நிலையில் வெங்கடேசன் நான்கு கடைகளில் போலி நகைகள் அடகு வைத்து மொத்தம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்ததையடுத்து, அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
English Summary
Youngman arrested for fraud by pawning fake jewelry in chennai