கொடைக்கானல் : சுற்றுலாப் பயணிகளை கவர அரசு நிலத்தில் கஞ்சா பயிரிட்ட இளைஞர் கைது.!
Youth arrested for cultivating cannabis on government land
கொடைக்கானல் பூம்பாறை வயல் பகுதியில் சுமார் 10 சென்ட் அரசு வருவாய் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட இளைஞரை கொடைக்கானல் போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை வயல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சுமார் 10 சென்ட் அரசு வருவாய் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததை போலீஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து கஞ்சா பயிரிட்ட நிலத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த திவாகர் என்பவரை போலிஸார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தங்களின் தேவைக்காகவும், வருவாய் ஈட்டுவதற்காகவும் நீண்ட நாட்களாக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு அதனை காயவைத்து பக்குவப்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கொடைக்கானல் போலீசார் கைது செய்து, பயிரிடப்பட்டிருந்த அனைத்து கஞ்சா செடிகளையும் அழித்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், திவாகரனின் கூட்டாளியும் சகோதரனுமான ஸ்ரீதரன் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Youth arrested for cultivating cannabis on government land