பாம்புகளுடன் நடனம் - வாலிபரை கையும் களவுமாக பிடித்த வனத்துறை.! - Seithipunal
Seithipunal


பாம்புகளுடன் நடனம் - வாலிபரை கையும் களவுமாக பிடித்த வனத்துறை.!

தேனி மாவட்டத்தில் உள்ள, முத்துதேவன்பட்டியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஆடலும், பாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ஒருவர் நாகப்பாம்பு மற்றும் சாரை பாம்புகளுடன் நடனம் ஆடினார்.

அதனை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து வனத்துறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோவை பார்த்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பாம்புகளுடன் நடனம் ஆடியது தேனி வீரபாண்டியைச் சேர்ந்த முகில் வண்ணன் என்பது தெரிய வந்தது. 

உடனே அவரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், அவரிடமிருந்து ஐந்து பாம்புகளை பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட பாம்புகளுக்கு பல் பிடுங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், அவர் சிறுவயது முதலே பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட முகில்வண்ணன் தேனி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில்  தொடர்புடைய, தலைமறைவான மேலும் சிலரை வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for dance with snake in dance singing programme in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->