திருவாரூர் : மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவர் - ஆத்திரத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு.!!
youth arrested for kill father in tiruvarur
திருவாரூர் : மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவர் - ஆத்திரத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு.!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் அருகே மேலராமன்சேத்தி மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர்கள் சுரேஷ்-சத்யா தம்பதியினர். இவர்களுடைய மகன் டேவிட்ராஜ். இவர் நன்னிலம் அரசு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில், சுரேஷ் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சுரேஷ் மதுபோதையில் சத்யாவிடம் தகராறு செய்துள்ளார். இதைபார்த்த டேவிட்ராஜ், சுரேஷிடம் ஏன் மதுகுடித்துவிட்டு வந்து அம்மாவிடம் தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த டேவிட்ராஜ், தனது தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த சுரேசுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் நித்யா குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
youth arrested for kill father in tiruvarur