நாகை மாவட்டம்.! கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் பைக்குடன் நிலை தடுமாறி விழுந்த இளைஞர் பலி.! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டத்தில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டு உள்ள 20 அடி பள்ளத்தில் பைக்குடன் நிலை தடுமாறி விழுந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே புத்தூர் பகுதியில் அரிச்சந்திரா ஆற்றுக்கரை தடுப்பு சுவர் கட்டுமான பணிக்காக சுமார் 20 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இந்த பள்ளத்தில் பிரிஞ்சுமூலை கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவர் நேற்று இரவு பைக்குடன் நிலைதடுமாறி தலைகீழாக விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைதொடர்ந்து பள்ளம் தோண்டிய இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும், இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததே விபத்து ஏற்படக் காரணம் என்று புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணி ஒப்பந்ததாரர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth killed after falling into a ditch dug for construction work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->