உள்ளே வராதே... திரும்பி போ... அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்துவ இளைஞர்கள்!  - Seithipunal
Seithipunal


பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொள்வதற்காக மேட்டூரில் இருந்து நேற்று மாலை பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி புறப்பட வந்தார். 

பொம்மிடி, பி.பள்ளிப்பட்டி லூர்து மலை அன்னை மேரி தேவாலயத்திற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வந்தார், இதனை பார்த்த கிறிஸ்துவ இளைஞர்கள் சிலர் அண்ணாமலை உள்ளே வரக்கூடாது என கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் மக்களின் இறப்பை ஏன் கேட்கவில்லை என கேள்வி எழுப்பி மாலை அணிவிக்க கூடாது, உள்ளே வராதே, திரும்பி போ என கிறிஸ்துவ இளைஞர்கள் முழக்கமிட்டனர். 

இதனை தொடர்ந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு கிறிஸ்துவ இளைஞர்கள் மணிப்பூரில் எங்கள் மக்கள் தாக்கப்பட்டனர். பாஜக தான் இதற்கு காரணம். இந்த புனிதமான இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என ஆவேசமாக பேசினர். 

இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி பின்னர் அண்ணாமலை லூர்து மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பாப்பிரெட்டிபட்டிக்கு புறப்பட்டு சென்றார். 

லூர்து மாதா அன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கிறிஸ்துவ இளைஞர்கள் தடுத்து நிறுத்தி முழக்கமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth protested against Annamalai entered Christian temple


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->