அத்துமீறி புகுந்த நர்சை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்.. பெரம்பலூரில் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்த வாலிபர், நர்சை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் செட்டியார் வீதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (23). இவர் சம்பவத்தன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அத்துமீறி புகுந்து, அங்கிருந்த நர்ஸ் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்த மருத்துவமனை பணியாளர்கள், மணிகண்டனை பிடிக்க முயன்றனர். ஆனால் மணிகண்டன் அனைவரையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth tried to rape the nurse who had trespassed in Perambalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->