செல்போன் கடையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் கைது..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பொன்ரங்க மூப்பனார் தெருவில் செயல்பட்டு வரும் ஒரு செல்போன் கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் பேரில் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிராம் கஞ்சா, ரூ. 1,180 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் ராம்ஜி வயது 24, மற்றும் அங்கு வேலை பார்த்த சூர்யா வயது 23 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 இதேபோன்று ராஜபாளையத்தை அடுத்துள்ள சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் பஸ் நிலையம் முன்பு வாகனங்களில் சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தார். 

அதில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது. இதுகுறித்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மதுரை பேரையூரை அடுத்த பெரியகடை பகுதியைச் சேர்ந்த கணேசன் (34) என்பது தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youths arrested for selling ganja at a cell phone shop.


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->