ஊழியரை கொடூரமாக தாக்கிய விவகாரம்: பிரபல யூ டியூபர் கேஜிஎஃப் விக்கி கைது! - Seithipunal
Seithipunal


சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில் பா.ஜ.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி கே.ஜி.எஃப் விக்கி துணிக்கடை ஒன்றை வைத்திருந்தார். 

அதில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் ரூ. 1 லட்சம் கையாடல் செய்து தலைமுறைக்கு மீண்டும் விக்கியிடம் வேலை கேட்டு வந்த போது அவரை அடியாள் வைத்து இரும்பு ராடால் தாக்கியுள்ளார். 

இதில் காயமடைந்த ஊழியர் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த வழக்கு குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாகிய விக்கியை தேடி வந்துள்ளனர். 

இந்நிலையில் கே.ஜி.எஃப் விக்கி சேலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் விக்கியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

அடிக்கடி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த விக்கியை 7 மாதங்களுக்கு முன்பே பா.ஜ.கவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YouTuber KGF Vicky arrested issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->