இந்தியாவில் 5ஜி சேவை.. சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட மத்திய அரசு.!!
5G coming 2022 in india
செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விரைவில் தொடங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் மாதத்திற்கு 13 ஜிபியாக இருந்த ஸ்மார்ட்போன் இணைய சேவை பயன்பாடு, 2020 ஆம் ஆண்டில் மாதத்திற்கு 14.6 ஜிபியாக அதிகரித்தது. இணைய சேவை பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் குறைந்தது 4 கோடி ஸ்மார்ட் போன் பயனாளர்கள் 5ஜி சேவை அறிமுகமாகும் வருடத்திலேயே பயன்படுத்த தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வகையில் இந்தியாவில் 5ஜி இணைய சேவை 2022-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், குருகிராம், சண்டிகர், ஜாம்நகர், அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ, புனே, காந்தி நகர் உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத்துறை இந்த ஆண்டு நேரடி அந்நிய முதலீடு 150 சதவீதம் உயர்ந்துள்ளது. உள்நாட்டு தொழில் நுட்பத்தைக் கொண்டு தொலைத் தொடர்புத் துறையால் சுமார் 224 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் 5ஜி பரிசோதனை திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.