வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஏர்டெல் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


அண்மையில் ஜியோ ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன.

இதில் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கான சில சலுகைகளை வழங்கியது போல் ஏர்டெல் நிறுவனமும் வழங்கியுள்ளது.

இந்த சலுகைகளில் இலவச ஓ டி டி  தளங்களுக்கான அணுகல், அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்ஸ், எஸ் எம் எஸ் உள்ளிட்டவை அடங்கும். இந்த சலுகைகள் வரும் 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பில், ₹979, ₹1029, ₹3599 ஆகிய மூன்று பேக்கில் ஏதேனும் ஒன்றில் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் டேட்டாக்கள் மற்றும் ஓ டி டி தளங்களின் அணுகல்களை பெறலாம் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த மூன்று திட்டங்களிலும் அன்லிமிடெட் 5 ஜி டேட்டா Wynk மியூசிக், அப்பல்லோ 24x7 Circle மூன்று மாத வேலிடியில் கிடைக்கும். இதில் ஒரு பகுதியாக Sony LIV, Aha, Chaupal, Hoichoi, SunNxt, Lionsgate என 22 க்கு மேற்பட்ட ஓடிடி தளங்கள் மற்றும் Airtel Xstream Play Premium ஆப் மூலமாக இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஏர்டெல் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Airtel company that has given customers a pleasant surprise


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->