விரைவில் விற்பனைக்கு வரும் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது தோற்றத்தில் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இருப்பினும், இதன் உள்புற அம்சங்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ள H2 பிராசஸர் இருமடங்கு மேம்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற வசதிகளை வழங்குகிறது.

இத்துடன் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பாடல்களை மாற்றுவது, வால்யும் அட்ஜஸ்ட் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். இந்த புதிய  இயர்பட்ஸ் உடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சிறிய ஸ்பீக்கர் கொண்டுள்ளது.

விலை விவரங்கள்:

புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் விலை - ரூ. 26 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவு செப்டம்பர் 9-ம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை செப்டம்பர் 23-ம் தேதி துவங்குகிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

* இதில், ஹை டைனமிக் ரேன்ஜ் ஆப்ளிபையர் கொண்ட ஆப்பிள் டிரைவர் வழங்கப்பட்டுள்ளது.

* மேலும், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வழங்கப்பட்டுள்ளது.

* இதில், ப்ளூடூத் 5.3 வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

* தனித்துவம் மிக்க ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங் வழங்கப்பட்டுள்ளது.

* இத்துடன், இன் கேஸ் ஸ்பீக்கர், கான்வெர்சேஷன் பூஸ்ட், பிரெசிஷன் ஃபைண்டிங் வழங்கப்பட்டுள்ளது.

* மேலும், அடாப்டிவ் டிரான்ஸ்பேரன்சி, அடாப்டிவ் இகியூ வழங்கப்பட்டுள்ளது.

* ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் ஆப்பிள் H2 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

* இதில், சார்ஜிங் கேசில் ஆப்பிள் U1 சிப் வழங்கப்பட்டுள்ளது.

* அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கான பிளேபேக் டைம் வழங்கப்பட்டுள்ளது.

* புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் மேக்சேப் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்கப்படுகிறது.

* ஐந்து நிமிட சார்ஜில் ஒரு மணி நேரம் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Apple launched new airbods pro model in Indian market


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->