பொது வை-பை பயன்படுத்துபவரா நீங்கள்? இது உங்களுக்குத்தான்.!
Attention for WiFi users
பொது வை-பை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை:
இலவச வை-பை, இன்டர்நெட் பிரியர்களுக்கான வரம் என்று தான் சொல்ல வேண்டும். மால்கள், கஃபேக்கள், ரயில் நிலையங்கள் என செல்லும் இடங்களில் எல்லாம் 'வை-பை" இணைப்பு இலவசமாக கிடைப்பது கொண்டாட்டமாக தான் இருக்கும்.
ஆனால் பொது இடங்களில் இப்படி வை-பை இணைப்பை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
வைரஸ் பரவுவது, மற்றவர்களால் வேவு பார்க்கப்படுவது, தகவல் திருட்டு போவது என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட பொது வை-பை காரணமாக இருக்கிறது. பொது வை-பை வசதியை பயன்படுத்தும்போது நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்...
கவனிக்க வேண்டியவை :
வை-பை இணைப்பு கொடுக்கும்போது அதிக கவனம் தேவை. பாதுகாப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய நிறுவனம் அல்லது இடங்களில் உள்ள வை-பை இணைப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள். நம்பகத்தன்மை இல்லாத இடங்களில் வை-பை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.
உங்கள் எண், பெயர், மொபைல் மாடல் போன்ற பெயர்களிலேயே பலர் இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் கவனமாக வை-பை இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.
வை-பை இணைப்பு பெறுவதற்கு பிரத்தியேக பாஸ்வேர்டு கூட தேவையில்லாத இடங்களில் ஹேக்கர்கள், உங்கள் தகவல்களை எளிதாக இடை மறித்து கையகப்படுத்த வாய்ப்பு உண்டு. இதனால் பணப்புழக்கம் சம்பந்தமான தகவல்கள், நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகள் ஆகியவை திருடுபோகக் கூடும்.
விண்டோஸ் இணையதளங்களில் பொது வை-பை இணைப்பு கொடுக்கும் முன்பாக Control panel, Network and sharing Center, change advanced sharing settings என்ற வரிசையில் உள்ளே சென்று public என்பதற்கு turn Off என்பதை 'செட்" செய்து கொள்ளுங்கள். இது வை-பை இணைப்பில் இடையில் மற்றவர் நுழைவதை தடுக்கும்.
குரோம், பயர்பாக்ஸ், ஒபேரா போன்ற உலாவிகளில் HTTPS Everywhere என்ற வசதி இருக்கும். இது நாம் அனுப்பும் தகவல்களை சங்கேத குறியீடுகளாக மாற்றி அனுப்பக்கூடியது என்பதால் பாதுகாப்பு உறுதியாகும்.
சில வேளைகளில் வை-பை எல்லை முடிவடையும் இடங்களில் பிரவுசிங் செய்ய நேர்Connectforget The Network என்ற எச்சரிக்கை வரலாம். இதனால் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்படும். மீண்டும் வை-பை எல்லைக்குள் நுழைய நேர்ந்தால் மீண்டும் தானாக இணைப்பு ஏற்பட்டுவிடும்.
இதுபோன்ற அசௌகரியங்களை தடுக்க Control panel Network and sharing Center என்ற வரிசையில் சென்று Connect automatically when this network is in range என்பதில் உள்ள 'டிக்" குறியை அகற்றுங்கள். Wireless property என்ற ஆப்ஷனை சொடுக்கி வையுங்கள்.