பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீட்டு தாமதத்திற்கு இது தான் காரணம்! - Seithipunal
Seithipunal


பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி அப்கிரேடு பணிகளில் உள்நாட்டு தயாரிப்புகளை தான் பயன்படுத்தும். இதுவே வெளியீட்டு தாமதமாக காரணம் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா என இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் நாட்டில் 5ஜி சேவையை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,

"பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிட விசேஷ உபகரணங்களை வாங்க முடியாமல் தவித்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த உபகரணங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

உபகரணங்களை வாங்கும் பணிகளை பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு தான் நிறைவு செய்யும். 4ஜி அப்கிரேடு பணிகளில் பிஎஸ்என்எல் உள்நாட்டு தயாரிப்புகளை தான் பயன்படுத்தும். இதுவே வெளியீட்டு தாமதமாக காரணம் ஆகும்". என்று தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSNL's 4G service launch Information released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->