₹.10,000 பட்ஜெட்டுக்குள் 5 சிறந்த மொபைல்களின் பட்டியல் இதோ.!  - Seithipunal
Seithipunal


ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களாலேயே வாங்க கூடிய வகையில் இருந்த  செல்போன்கள் இன்றைய கம்ப்யூட்டர் உலகத்தில் எல்லோரும் பயன்படுத்தக் கூடிய விலையில் நவீன வசதிகளுடனும் கிடைக்கிறது. 

பத்தாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய செல்போன்களையும் அவற்றில் இருக்கக்கூடிய வசதிகள் குறித்தும் காணலாம்.

1) ரியல் மீ சி 33

இந்த செல்போனானது 6.2  இன்ச் எல்சிடி திரையுடன், ஹெச் டி தொடுத்திரையை கொண்டுள்ளது. ‌இதன் பேட்டரி 5000 எம்.ஏ.ஹெச் ஆகும். மேலும், இது 10 வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியை கொண்டுள்ளது.  சாதாரண பயன்பாட்டிற்கு  இந்த மொபைலின் சார்ஜ் ஒரு நாள் முழுவதுமாக நீடிக்கும். 
இதன் பின்புற கேமரா 50 மெகாபிக்சலுடன் பிரைமரி சென்சார் முறையில் புகைப்படங்களை எடுக்க கூடியது. முன்பக்க கேமராவானது 5 மெகா பிக்செல் கொண்டுள்ளது. 

இதன் Ram 4 ஜிபி ஆகும். மேலும், இது 64 ஜிபி இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது .

இதன் விலை ரூ.9,199/-

2) 'போகோ எம் 2'

இந்த விலை நம் பட்ஜெட்டுக்குள் எளிதாக பரிந்துரைக்கப்படக்கூடிய ஒரு செல்போன். இந்த செல்போன் 6.53 இன்ச் தொடுதுறையுடன் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 

இதன் பேட்டரி  5000 எம்ஏஹெச் செயல் திறனை கொண்டது. 18 வாட்ஸ் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது.

13+8+5+2  மெகா பிக்ஸல்  
க்வாட் கேமரா  பின்பக்கம் உள்ளது. 

இதன் முன் பக்க கேமரா 8 மெகா பிக்ஸல்கள்.

4 ஜிபி ராம் மற்றும் 64  ஜிபி  இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

இதன் விலை ரூ. 9,999

3) சாம்சங்  கேலக்ஸி எம் 04

இந்த மொபைல் போனானது, 6.5  இன்ச் எச்டி டிஸ்ப்ளே-ஐ கொண்ட இந்த செல்போனானது, 5000 எம்ஏஹெச் செயல் திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது. 

13 மெகா பிக்ஸல்   பின்பக்க கேமராவும் இரண்டு மெகா பிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. நாலு ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ள இந்த செல்போன், 64 பிட் வகையைச் சார்ந்தது.

இதன் விலை ரூ.9,499/-

4) விவோ ஒய் 16

6.51 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேயுடன்  ஐபிஎஸ் டெக்னாலஜியும் கொண்டுள்ள தொடுத்திரையுடன் வரும். 

இந்த செல்போனில் 5000 மில்லி ஆம்பியர் பேட்டரியை கொண்டுள்ளது. 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. 

இதன் பின்பக்க கேமரா 13+2  மெகா பிக்சல் கொண்ட இரட்டை கேமரா ஆகும். இதன் ஃபிரண்ட் கேமரா  ஐந்து மெகா பிக்ஸெல்களை கொண்டுள்ளது. மூணு ஜிபி Ram கொண்ட இந்த செல்போன் ஆனது  64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது .

இதன் விலை ரூ. 9,999/-

5) டெக்னோ ஸ்பார்க் 7T

6.52  இஞ்சி ஹெச்டி டிஸ்ப்ளேவுடன் ஐபிஎஸ்  தொழில்நுட்பத்தை கொண்ட  தொடுதிரையுடன் வரும் இந்த செல்போன்  6000 மில்லி ஆம்பியர்  பேட்டரி திறனையும் 10 வாட்ஸ்  ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

48 மெகா பிக்சலை கொண்ட  இதன் பின்பக்க கேமரா  சிறப்பம்சமாகும். எட்டு மெகா பிக்சல் ஃபிரண்ட் கேமராவையும் கொண்டுள்ளது. நாலு ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது.

இதன் விலை ரூபாய்:  8,899/-

உங்கள் பட்ஜெட்டுக்கு எது சரியாக வருமோ அதை தேர்வுச் செய்து வாங்கி மகிழுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Budget under 10000 mobile phone list


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->