X இன் பயனர்களிடமிருந்து இந்த சேவைக்கும் கட்டணம் வசூலிக்கும் எலான் மஸ்க் !!
Elon Musk charges users of X for this service too
ட்விட்டர் நிறுவனம் எலோன் மஸ்க்கின் கைகளுக்கு வந்த பிறகு அந்த சமூக ஊடக தளம் X கிட்டத்தட்ட முற்றிலும் மாற்றப்பட்டு விட்டது. அந்த சமூக ஊடகத்தில் மேலும் பல புதிய அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது இதில் மற்றொரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு X நிறுவனம் கட்டணம் வசூலிக்கப் போகிறது. X வலை தலத்தில் லைவ் ஸ்ட்ரீம் தொடங்குவதற்கு இப்போது பிரீமியம் சந்தா அவசியம் என்று X நிறுவனம் அதிகார்வபூர்வமாக அறிவித்தது. மேலும் இது இந்தியாவில், பிரீமியம் சந்தாவிற்கு ஒவ்வொரு மாதமும் 566.67 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து உள்ளது.
அதே தருணத்தில், இந்த அம்சத்தை Instagram, Facebook மற்றும் YouTube போன்ற சமுக வலை தளங்களில் இலவசமாகப் பயன்படுத்தி கொள்ளும் வசதி உள்ளது. பயனாளர்கள் சமூக ஊடக தளமான X தளத்தில் லைவ் ஸ்ட்ரீம் அம்சத்தைப் பயன்படுத்த இப்போது பணம் செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் இந்த அம்சம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அந்த நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை.
ஆனால் தற்போது லைவ் ஸ்ட்ரீம் செய்ய பிரீமியம் அம்சங்கள் அவசியம் என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில், சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் வாங்கினார்.
அதனை தொடர்ந்து அந்த பயன்பாட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. எலான் மஸ்க் X தளத்தில் பிரீமியம் சந்தா திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த சேவையை பெற இணைய பயனர்கள் பிரீமியம் சந்தாவுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.215 செலுத்த வேண்டும். மேலும், பிரீமியம் ++ சந்தாவுக்கு பயனர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1133 செலுத்த வேண்டும். பிலிப்பைன்ஸ் மற்றும் நியூசிலாந்தில் போன்ற நாடுகளில் புதிய பயனர்கள் இடுகையிடுவதற்கு $ 1 வசூலிக்கப்படுகிறது.
English Summary
Elon Musk charges users of X for this service too