ட்விட்டருக்கு போட்டியாக வருகிறது திரெட்ஸ்- மெடா நிறுவனம் அதிரடி!! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டாகிராம் வாயிலாக ட்விட்டர் போன்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரை வாங்கிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். இதனால் பல ட்விட்டர் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

இந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் வாயிலாக Threads’எனும் தளத்தை உருவாக்கி உள்ளது. இந்த தளத்தை ஜூலை 6 அன்று பயனர்கள் சேவைக்குக் கொண்டு வர இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் அடிக்கடி சர்ச்சையை கிளப்பும் எலான் மஸ்க், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்கை ஒரு முறை வம்புக்கு இழுத்திருந்தார். கூண்டில் சண்டை போட தயாரா என்று ட்விட்டர் மூலம் அவர் கேட்டிருந்தார்.

அதற்கு மார்க் ஜூக்கர்பெர்க் இடத்தை கூறுங்கள் என இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இந்தநிலையில்  ட்விட்டருக்கு போட்டியாக ஒரு தளத்தையே உருவாக்கி  மார்க் ஜூக்கர்பெர்க் அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Threads is competing with Twitter Meta company in action


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->