டெலிட் ஃபார் மீ - வாட்ஸ்-அப் புதிய அப்டெட்!
WhatsApp Delete For Me UNDO Option New Update
'Delete For Me' என்ற புதிய அம்சத்தை மேட்டாவின் whatsapp பயனாளர்களுக்கு அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாட்டை சேர்ந்த இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸாப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கும், உரையாடுவதற்கும், வீடியோ கால் பேசுவதற்கும் வசதியாக இருக்கும் இந்த வாட்ஸ் அப்பை பயனாளர்கள் மகிழ்ச்சியுடன் பயன்படுத்து வருகின்றனர்.
அவ்வப்போது இந்நிறுவனம் புதிய புதிய வசதிகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படியாக தற்போது ஒரு மெசேஜை டெலிட் செய்தால் உடனே அதனை UNDO செய்து கொள்ளும் புதிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளது.
அதாவது நாம் வாட்ஸ் அப்பில் டெலிட் ஃபார் எவ்ரி ஒன்னுக்கு பதிலாக, டெலிட் ஃபார் மீ என்று கொடுத்து விட்டால், உடனே அந்த மெசேஜ் அழிந்துவிடும். அதனை நாம் அனுப்ப வேண்டாம் என்று நினைத்தவர்கள் படிக்க நேரிடும்.
தற்போது அந்த மெசேஜை 'டெலிட் ஃபார் மி' கொடுத்தாலும் UNDO செய்து கொள்ள whatsapp நிறுவனம் வாய்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.
எனவே இனி அவசரப்பட்டு டெலிட் ஃபார் மீ கொடுத்து விட்டோம் என்று கவலை வேண்டாம். UNDO கொடுத்துவிட்டு மீண்டும் நீங்கள் டெலிட் ஃபார் எவரி ஒன் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி டெலிட் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய அம்சம் whatsapp பயனாளர்களுக்கு பெரிதும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
WhatsApp Delete For Me UNDO Option New Update