மக்களே அலெர்ட்... இயல்பைவிட 2 - 3 டிகிரி செல்சியஸ் "வெப்பம் அதிகரிக்கும்"... வானிலை மையம் எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4-ந்தேதி தொடங்கி கடந்த 29-ம் தேதி நிறைவு பெற்றது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையாமல், பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் கொளுத்தி வருகிறது. இதில் தமிழகத்தில் நேற்று முன்தினம் 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை, வேலூர், திருத்தணி, மதுரை உள்ளிட்ட 17 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவானது.

இந்நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 to 3 degree Celsius temperature will increase tamilnadu for today and tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->