என்ன நடக்கபோகுதோ! நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னைக்கு தென்கிழக்கில், 480 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும், இது நாகை, புதுச்சேரி மற்றும் திரிகோணமலை போன்ற இடங்களுக்கும் அருகிலுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று 66-75 கி.மீ. வேக காற்றுடன் சுறாவளி புயலாக மாறி நாளை காலைக்குள் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. எனினும், இது புயலாக மாறுவதற்கான நேரம் மற்றும் வீசும் காற்றின் வேகம், கடந்த 12 மணிநேரத்திற்கு தாமதமாக உள்ளது.

இந்த புயலின் பாதிப்பு, கடலோர பகுதிகளுக்கு சற்று அதிகமாக இருக்கலாம், எனவே நிலைமைகள் மேல் கவனமாக இருக்க வேண்டும். இந்த சமயம், மிதமான மழையும் மிதமான காற்றையும் எதிர்பார்க்கலாம். மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A moving depression A chance of strengthening into a storm by tomorrow morning


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->