நாளை மறுநாள் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை மையம் தகவல்.!
air low pressure change strengthen tomarrow
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது. ஆனால், இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் மீண்டும் வந்த பாதையிலேயே திரும்பி சென்னைக்கு கிழக்கே வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி 23-ந்தேதி டெல்டா-வட இலங்கையையொட்டி நகர்ந்து சென்று, அதற்கு அடுத்த நாள் பாக்நீர் இணைப்பு அல்லது டெல்டா பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து அரபிக்கடலை சென்றடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், தமிழகத்தில் இன்று முதல் டிச.25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:- "புதுச்சேரிக்கு கிழக்கே நிலைகொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது இன்று வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் டிச.25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் நாளை நெல்லூருக்கு கிழக்கே நிலைக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆந்திர கடல் பகுதிக்கு மேல் உயர் அழுத்தம் இருப்பதால், புயல் சின்னம் மேலும் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை. ஆகவே, இது மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்பி நாளை மறுநாள் சென்னைக்கு அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (22ம் தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
air low pressure change strengthen tomarrow