11 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

 


சென்னை வானிலை ஆய்வு நடுவம் விடுத்துள்ள செய்திகுறிப்பில்  வேலூர்,திருப்பத்தூர்,தருமபுரி,சேலம், திருச்சி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சா, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நடுவம் கூறியுள்ளது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூரிலும் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என்றும் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் செப்டம்பர் 2-ம் தேதி தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிவோ மீட்டர் வேசுந்திலும் வீசக்கூடும் எனவும், 03.09.2023 இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு நடுவம் அறிவுறுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cennai weather announcement 30082023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->