அவ்ளோதான் நம்பள முடிச்சுவிட்டிங்க போங்க! 21 மாவட்டகாரர்களே உஷார்! இனித்தான் ருத்ரதாண்டவம் ஆடப்போகின்ற பருவமழை!
Chance of heavy rain in 21 districts of Tamil Nadu today Chennai Meteorological Department announced
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில், வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14 அன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 15-ஆம் தேதி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரிக்கும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 12 செ.மீ., மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மற்றும் கொள்ளிடத்தில் தலா 11 செ.மீ., அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்துடன் சூறாவளிக் காற்று வீசக் கூடும். இதனால், இந்த கடலோர பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
English Summary
Chance of heavy rain in 21 districts of Tamil Nadu today Chennai Meteorological Department announced