தென் தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு..!!
Chance of Light rain for 3 days in South Tamilnadu districts
தென்தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
இன்று முதல் 06/03/2023 வரை: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07/03/2023 மற்றும் 08/03/2023: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
English Summary
Chance of Light rain for 3 days in South Tamilnadu districts