மக்களே உஷார்! தமிழகத்தில் சில இடங்களில் நவ.2 வரை மழைக்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் (அக். 27 அன்று காலை 8.30 மணி வரை) தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. 

மழை அளவுகள்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதியில் 8 செ.மீ. கன்னியாகுமரி மாவட்டத்தில் மைலாடி மற்றும் தக்கலையில் 7 செ.மீ. நாகர்கோவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழிப்போர்விளை ஆகிய இடங்களில் 5 செ.மீ. கன்னியாகுமரி மாவட்டத்தின் நெய்யூர், பேச்சிப்பாறை, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 4 செ.மீ.

வானிலை முன்னறிவிப்பு:

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (அக். 28) தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இடி, மின்னலுடன் பெய்யக்கூடும்.

நாளை முதல் (அக். 29) 2 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழையும், அக். 31 முதல் நவம்பர் 2 வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
  
சென்னை நகரின் வானிலை: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance of rain till November 2 in some places in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->