சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயிலின் தாக்கமானது 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்க ஆளாகி வரும் நிலையில் தென் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னையின் புறநகரான மதுராந்தகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உளளதாகவும், மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance to rain in Chennai outer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->