தமிழ்நாட்டில் தொடர் கனமழை!...தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அப்டேட் இதோ! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்தது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதில், சென்னையில் சில பகுதிகளில் மட்டுமே மழை நீர் தேங்கி நின்ற நிலையில், அவை சரி செய்யப்பட்டது. இருந்த போதிலும் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளிலும், வேலூர், ராணிப்பேட்டை உள்பட உள் மாவட்டங்களிலும் இன்று வெப்பச்சலனத்தால் மழை பெய்யும் என்றும், இந்த மழை இன்று இரவும் நாளை காலையும் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் பெய்யும் மழையானது மக்கள் ரசிக்கும்படியாகவே இருக்கும் என்றும், அவை அச்சப்படுத்தும் வகையில் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவான நிலையில் சென்னையில் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை வரை அதிக கனமழை பெய்தது. இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Continued heavy rain in tamilnadu here is the update from tamilnadu weatherman


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->