இன்னும் 10 நாட்கள் தான்.. வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு.. வெளியான முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வட மற்றும் உள் மாவட்டங்களில் கோடை மழை தற்போது தொடங்கியுள்ளது. கர்நாடகா மற்றும் அதன் எல்லோரும் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. 

இந்த கோடை மழையானது படிப்படியாக மேற்கு தொடர்ச்சி மலையூட்டிய மாவட்டங்களுக்கு வரும் நாட்களில் இடம்பெயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வருமே 7ம் தேதி வரை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

அதன் பிறகு மே 8ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே வரும் மே 17 முதல் 18ஆம் தேதி வாக்கில் தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தெற்கு அந்தமான் நிக்கோபார் தீவுகள் இடையே உருவாகி வலுவடைந்து புயலாக வடக்கு நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதால் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் இடையே இடம்பெயர்ந்தால் அதிகப்படியான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone will form in bay of Bengal near Andaman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->