தமிழகத்திற்கு நாள் குறித்த காற்றழுத்த மண்டலம்..!! டிச.20ல் கனமழைக்கு வாய்ப்பு..!!
heavy rain will be falls in Tamil Nadu from December 20
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் கரையை கடந்த போது தமிழக முழுவதும் இரண்டு நாட்களுக்கு கன மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் தென்கிழக்கு அந்தமான் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று உருமாறுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அந்தமானில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு - தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் டிசம்பர் 19ஆம் தேதி தெற்கு இலங்கை நோக்கி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நகர்ந்து வரும் டிசம்பர் 20ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் இலங்கை இடையேயான கடற் பகுதியில் மையம் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி தென் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என தெரிய வந்துள்ளது.
அதேபோன்று வரும் டிச.20ஆம் தேதி முதல் வட தமிழகம் முழுவதும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து தென்தமிழகம் ஒட்டிய கடற் பகுதியில் நிலை கொள்ளும் என்பதால் குறைந்தபட்சம் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
English Summary
heavy rain will be falls in Tamil Nadu from December 20