சென்னை புறநகரில் கொட்டப் போகும் கனமழை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்தால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

இந்த நிலையில் வரும் மே 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அதே போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையின் புறநகரான ஊத்துக்கோட்டை, வாலாஜாபாத், குன்றத்தூர், திருவள்ளூர், திருத்தணி, காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain will be occurred in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->