அதீத கன மழை.!! 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.!! வானிலை மையம் எச்சரிக்கை.!!
IMD heavy rain red alert for 4 states
மத்திய மேற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தற்போது தெற்கு ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரை ஒட்டிய வங்க கடலில் தற்பொழுது மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா கோவா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அம்மாநில அரசு இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு அதீத கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் அதீத மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
IMD heavy rain red alert for 4 states