ரெட் அலர்ட்.. 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது.!!
jawad cyclone update
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக்கியது. நேற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டது. அதன்படி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது தற்போது மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது .இந்தப் புயல் நாளை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால், ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலைத் தொடர்ந்து டிசம்பர் இரண்டாவது வாரத்தில் அந்தமான் அருகே வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.