தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. பல இடங்களில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். நேற்று வாக்குப்பதிவின்போது தமிழ்நாட்டில் வெப்பம் தாங்க முடியாமல் மூன்று பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Light rain in 5 South districts in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->