அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நாளை (அக். 21) காற்றழுத்த தாழ்வு உருவாகவுள்ளது, இது 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்திய அந்தமான் கடல் பகுதியில் 5.8 கிமீ உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய வங்கக் கடலின் கிழக்கு பகுதி மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடியதாக கூறப்படுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வட தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அக்டோபர் 20, 21, 24 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களில், 22, 23, 25 தேதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

- அக்டோபர் 20: தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர்
- அக்டோபர் 21: கோவை, திருப்பூர், திண்டுக்கல் மலை பகுதிகள், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 17 செ.மீ., அறந்தாங்கி (புதுக்கோட்டை) 10 செ.மீ., உசிலம்பட்டி (மதுரை) 9 செ.மீ., அவலூர்பேட்டை (விழுப்புரம்), பேராவூரணி (தஞ்சாவூர்) 8 செ.மீ.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Low pressure will develop in Andaman Sea area Chance of rain in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->