பாலுணர்வு, வேட்கை - பூங்குடி! மாரி செல்வராஜ் இதை செய்திருக்கக் கூடாது! நறுக்குன்னு கொட்டிய கொற்றவை!
SM post Kotravai about vaazhai maari selvaraj
சமூகவலைத்தளமான எக்ஸ் மற்றும் முகநூலில் கொற்றவை என்ற எழுத்தாளரின் பதிவு இன்று வைரலாகி வருகிறது. அதன் விவரம் பின்வருமாறு:
"விடலைப் பருவக் காதல், பாலுணர்வு, வேட்கையை பதிவு செய்வதில் தவறில்லை, அதேவேளை எதிர் தரப்புல் உள்ள Adult, குறிப்பாக ஆசியர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் அதை ஊக்குவிப்பது போன்ற செயலில் ஈடுபடுவது தவறுதான்! அந்த வகையில் வாழை திரைப்படம் பதிவு செய்த சிவனைந்தன் பூங்கொடி உறவு கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று!
கைக்குட்டையை திருப்பிக் கொடுத்து அதை ஊக்குவித்தார் என்பதுதான் செயல்! பின்பகுதியில் அந்த சிறுவன் அம்மா மாதிரி, அக்கா மாதிரி என்று சொல்வதெல்லாம் சப்பைக்கட்டு!
மசாலா படங்களில் வைக்கப்படும் மெசேஜ் + குத்துப்பாட்டு கலவைக்கும், இதற்கும் வேறுபாடில்லை! அவர்கள் செய்வதைக் கூட விட்டுவிடலாம், தோழர்கள் இந்த கலவையை செய்யக் கூடாது!
ஒன்று முழுமுற்றாக மசாலா படம் எடுக்கலாம் அல்லது ஒடுக்கப்படும் சமூகம் குறித்த பதிவென்றால் ஒழுங்காக, நேர்மையாக எடுக்க வேண்டும்! இந்த சாயலில், அந்த மசாலாவை படம் நெடுக வைத்து, அந்த உணர்வும், உறவும் தான் அவன் உயிரைக் காத்தது என்று செய்தி சொல்வது அபத்தம், ஆபத்து!
மாரி செல்வராஜ் இதை செய்திருக்கக் கூடாது!
சமூக அக்கறை கொண்டோர் இந்த விமர்சனங்களை சார்புக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும்! அடுத்தவர் செய்தால் கல் எறிவோம், எங்களவர் செய்தால் ஆஹா என்ன ஒரு உண்மை பதிவு என்று கொண்டாடுவோம் என்பது விமர்சனத்திற்கு உட்பட்டது!
வாழை திரைப்படத்தில் ஆசியையின் தோற்றம் உட்பட, கருத்தியல் ரீதியாக நிறைய பிரச்சினைகள் உள்ளன! சக தோழராக இதை நான் பதிவு செய்தே ஆக வேண்டும்!
விமர்சிப்பவர்களை pervert, casteist என்ற வழக்கமான உருட்டுகள் வரவேற்கபடுகின்றன" என்று பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
SM post Kotravai about vaazhai maari selvaraj