"களத்தில் இளைஞர் அணி"!...உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை! - Seithipunal
Seithipunal


எதிர் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை திமுக கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.

முன்னதாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், இதில் குழுவின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  

இந்த குழுவில் துணை முதலமைச்சர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில், இவர்கள் தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணி வாரியாக மாநில நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி, இது குறித்த விவரங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, சேலத்தில் இன்று மாலை கருப்பூரில் நடைபெறும் மாநில அளவிலான தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரான பின்னர் முதன்முத லாக இன்று நடைபெறும் இந்த இளைஞரணி கூட்டத்தில் "களத்தில் இளைஞர் அணி" என்ற நோக்கில்  200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இளைஞரணியின் செயல்பாடுகளை  தீவிரப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

இதன் காரணமாக மாநில துணை செயலாளர்கள் மற்றும் மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth team on the field udhayanidhi stalin consultation with youth team administrators today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->