தவெக மாநாட்டில் விஜய் ரேம்ப் வாக்!...தொண்டர்களை சந்திக்க 800 மீட்டர் தூரத்திற்கு பணிகள் மும்முரம்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின்  முதல் மாநில மாநாடு இந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில்  மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று  நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும் என்றும்,  குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு தவெக கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பூமி பூஜைக்கு பந்தல் கால் நாடும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் வரும் 27-ம் தேதி மாநாட்டிற்கு வரும் கட்சியின் தலைவர் விஜய், முதலில் 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மாநாட்டு மேடைக்கு செல்லும் வகையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களை விஜய் சந்திப்பதற்காக 800 மீட்டர் நீளத்திற்கு ரேம்ப் வாக் செல்ல உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு ரேம்ப் வாக் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay ramp walk in tvk conference work is busy for 800 meters to meet the volunteers


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->