நான் ஈ திரைப்பட நடிகர் சுதீப்பின் தாயார் காலமானார்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் வெளியான நான் ஈ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கர்நாடக சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் வெளியான நான் ஈ உள்பட சில திரைப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் கன்னட சினிமாவிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையே, நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, சரோஜா சஞ்சீவ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naan ee movie actor sudeep mother passed away


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->