தென் மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.! காரணம் என்ன?
Meteorological Center warning to peoples for Drought
தென் மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.! காரணம் என்ன?
நாட்டின் தென் மாநிலங்களான கேரளம், கர்நாடகம், மற்றும் தமிழகத்தின் மேற்கு, தெற்கு மாவட்ட பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழையானது ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதத்தின் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் வரையில் தொடரும்.
இதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களில் தண்ணீர் தேவை முழுமை அடையும். ஆனால், இந்த வருடம் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கியதுடன், கேரளம், தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தைவிட குறைவாகவே பெய்தது.
இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் கூட இன்னும் நிரம்பாத நிலையில் தமிழகத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், சாகுபடி செய்யப்பட்டு இருந்த குறுவைப் பயிர்களும் காய்ந்து நாசமானது.
இந்த வருடம் பருவமழை 167.6 மில்லி மீட்டர் அளவிற்கு மட்டுமே பெய்துள்ளது. ஆனால், இதே காலக்கட்டத்தில் வழக்கமாக 182.2 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும் என்ற நிலையில், 8 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை பற்றாக்குறையினால் தென் மாநிலங்களில் வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
English Summary
Meteorological Center warning to peoples for Drought