#Justin | தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!
Next 3 hours rain in 11 districts of tamilnadu
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது இன்று புயலாக வலுபெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Next 3 hours rain in 11 districts of tamilnadu