வீட்டை விட்டு யாரும் வெளிய வரவேண்டாம்! ரெட் அலெர்ட்! இனிதான் மழையே ஆரம்பம்! - Seithipunal
Seithipunal


மும்பையில் தொடரும் கனமழை காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்துள்ளது. அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

இந்தநிலையில் இன்று மும்பையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம்  மும்பைக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சமூக வலைத்தள பக்கம் எக்ஸ் பதிவிட்டு உள்ளதாவது, மும்பைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை வாசிக்கள் அனைவரும் வீட்டிலே இருக்க கேட்டுக்கொள்கிறோம். ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் 100,112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக அருகாமையில் உள்ள விமான நிலையங்கள் இருந்து மும்பை வர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 44 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

மும்பையில் இதுவரை கனமழை காரணமாக பூனேவில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவர் தானேவிலுள்ள பார்வி அணையில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Red Alert due to heavy rains in Mumbai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->