வானில் ஏற்பட்ட மாற்றம்.. இன்று முதல் 4 நாட்களுக்கு மழையாம்..‌ எங்கெல்லாம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை வெயில் எப்போதும் மார்ச் இறுதியில் தான் தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஏன் தொடங்கி விட்டது. மார்ச் மாதம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. 

குறிப்பாக தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்தது. 

இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதியில் மேல் ஒரு வளிமண்டல கீழடக்க சுழற்சி நிலவு அதன் காரணமாக இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏப்ரல் 24 , 25 ஆகிய தேதிகளில் தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஒரு சிலர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RMC announced rain will be occur 4 days in Tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->