5ஆம் தேதிக்குள் சென்னைக்கு ஒரு சம்பவம் - தமிழ்நாடு வெதர்மேன்! - Seithipunal
Seithipunal


நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதிக்குள் சென்னைக்கு (ஒரு சம்பவம்) மிகப்பெரிய மழை காத்திருக்கிறது என்று, தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வரும் 31ஆம் தேதி முதல் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வானிலை மற்றும் கனமழை குறித்த தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் தனியார் வானிலை ஆர்வலர் 'தமிழ்நாடு வெதர்மேன்' வெளியிட்டுள்ள தகவலில், "தமிழகத்தின் மத்திய கடலோர, தெற்குக் கடலோர மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மழை தொடங்கிவிடும். 

அக்டோபர் 31 முதல் நவம்பர் முதல் வாரம் வரை வடக்கு கடலோர தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளுக்கு மிகப்பெரிய மழை நாள்கள் காத்திருக்கிறது.

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, வரும் 31 முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை நல்ல மழையைக் கொடுக்கும்.

இந்த ஆறு நாள்களில், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு நாளாவது மிக கனமழை பெய்யும் நாளாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொல்லப்போனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தைப் போலவே, இந்த ஆண்டும் இருக்கப் போகிறது" என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Weather man Oct 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->