காலை வேளையில் லேசான பனிமூட்டம்: சென்னை மக்களுக்கு ஜில் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கான சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள வானிலை முன்னேறிவிப்பில், 

இன்று மற்றும் நாளை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மார்ச் 30: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

மார்ச் 31: தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

ஏப்ரல் 1: தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

ஏப்ரல் 2 மற்றும் 3: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்: இன்று மற்றும் நாளை: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu weather report 28 jan 2024


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->