தமிழ்நாட்டில் "5°C வரை வெப்பநிலை உயர்வு"... எச்சரிக்கும் வானிலை மையம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலே நிறைவு வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைப்பொழிவு காணப்படவில்லை. 

அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு, கரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று கோயம்புத்தூர், தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சேலம், திருச்சி, திருவள்ளூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் எனவும் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் எனவும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசோக் உரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temperature 5 deg celcius increased in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->