மக்களே கவனமா இருங்க.! 3 நாட்களுக்கு "வெப்பம் அதிகரிக்கும்" - வானிலை மையம் எச்சரிக்கை
The temperature will increase for three days in tamilnadu
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பம் வாட்டி வதைக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதில் நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்த நிலையில், அதிகபட்சமாக சென்னையில் 109 டிகிரியும், வேலூரில் 106 டிகிரியும் பதிவானது.
இந்நிலையில், 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
The temperature will increase for three days in tamilnadu